முன் நெற்றி முடியை வளர.. முடி உதிர்வு நிற்க.. இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

முன் நெற்றி முடியை வளர.. முடி உதிர்வு நிற்க.. இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்!

தலை முடியை பராமரிக்க தவறினால் சிறு வயதிலேயே முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம். தலை முடி சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணையை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்
*கருவேப்பிலை
*நெல்லிக்காய்
*தேங்காய் எண்ணெய்
*செம்பருத்தி இலை

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் வெந்தயம், 1/2 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 பெரு நெல்லி (விதை நீக்கியது), 5 செம்பருத்தி இலைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 200 மில்லி தேங்காய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு குறைவான தீயில் காய்ச்சி கொள்ளவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி வந்தால் முடி உதிர்வு நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.