சொத்தைப்பல் வலி? 1 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

0
64
#image_title

சொத்தைப்பல் வலி? 1 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பல் சொத்தையாக காரணம்:-

*அதிகப்படியான இனிப்பு உண்ணுதல்

*பற்களை முறையாக துலக்காதது

*உணவு உட்கொண்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல்

*குளிர்ந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

பல் சொத்தையால் வரும் பாதிப்பு:-

*பல் வலி

*வாய் துர்நாற்றம்

*ஈறுகளில் வீக்கம்

*பல் குடைச்சல்

*பல் கூச்சம்

சொத்தைப்பல் வலி சரியாக வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*குப்பைமேனி இலை – 10 முதல் 15

*காட்டன் பஞ்சு – 1

செய்முறை:-

10 முதல் 15 ,குப்பைமேனி இலைலகளை பறித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு உரலில் போட்டு நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றில் சிறு காட்டன் பஞ்சை நினைத்து சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும்.
இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்துவது நல்லது.

இதை தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட சொத்தைப்பல் வலி சரியாகிவிடும்.