சளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!!

0
44
#image_title

சளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!!

மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*துளசி இலை – 1 கையளவு

*கற்பூரவல்லி – 2 கையளவு

*திப்பிலி பொடி – 1/2 தேக்கரண்டி

*மிளகு பொடி – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*சித்தரத்தை பொடி – 1 தேக்கரண்டி

*ஓமம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் 2 கையளவு அளவு கற்பூரவல்லி இலை, 1 கையளவு துளசியை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி சித்தரத்தை பொடி, 1/2 தேக்கரண்டி திப்பிலி பொடி, 1 தேக்கரண்டி மிளகு பொடி சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
ஊற்றிய 1/2 லிட்டர் தண்ணீர் 1/4 லிட்டராக வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதில் சிறிதளவு காய்ச்சிய பால் மற்றும் பனக்கற்கண்டு சேர்த்து கலக்கி பருக வேண்டும்.

பனக்கற்கண்டுக்கு பதில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளலாம். திப்பிலி பொடி, சித்தரத்தை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இந்த மூலிகை கஷாயத்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை என தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருகுவதன் மூலம் சளி, இருமல், உடல் வலி, காய்ச்சல் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும்.