கை, கால் சுருக்கம் நீங்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க!
நம்மில் பலருக்கு முகம் பொலிவாக இருந்தாலும் கைகளில் சுருக்கம் இருக்கும். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கை, கால்களுக்கு நாம் கொடுக்க தவறுவதால் தான் அவை விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த கை, கால் சுருக்கத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.
தீர்வு 01:-
தேவையான பொருட்கள்:-
*கேரட்
*தேங்காய் எண்ணெய்
*மஞ்சள் தூள்
செய்முறை…
முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த கேரட் சாற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கை, கால் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்து வந்தால் கை, கால் சுருக்கம் விரைவில் சரியாகும்.
தீர்வு 02:-
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய்
*பாதாம்
செய்முறை…
10 பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 1 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கை, கால் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்து வந்தால் கை, கால் சுருக்கம் விரைவில் சரியாகும்.
தீர்வு 03:-
தேவையான பொருட்கள்:-
*மஞ்சள்
*கற்றாழை
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கை, கால் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்து வந்தால் கை, கால் சுருக்கம் விரைவில் சரியாகும்.