இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!!

0
171

இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!!

சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் தலையில் இருக்கக்கூடிய பொடுகு. இந்த பொடுகினால் முடி உதிர்வு, தலை வழுக்கை அடைதல் தோல் வியாதிகள் முகத்தில் பருக்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த பொடுகு பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. வறண்ட சருமம், முறையற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு விளம்பரங்களை பார்த்து நிறைய ஷாம்பு முதலியவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள்.ஆனால் அதில் தீர்வு கிடைத்திருக்காது.

இந்த பிரச்சனை தீர இயற்கையான ஒரு மருந்தை தயாரிப்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த இரண்டையும் நன்கு கலந்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வரவும்.

பிறகு 20 நிமிடங்களுக்கு இதை அப்படியே விடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு ஏதேனும் ஒரு ஷாம்புவை போட்டு முடியை அலசி விடவும். இவ்வாறு செய்வதால் பொடுகு தொல்லை முற்றிலுமாக குணமடையும்.

இதற்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் முற்றிலும் ஒரிஜினலாக இருத்தல் வேண்டும். இதே போல் சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் முடி கொட்டுதல் ஏற்படும். இவர்கள் தயிரை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டு ஷாம்பு போட்டு குளித்து வர உடம்பில் உள்ள உஷ்ணம் குறைந்து முடி நன்கு பளபளப்பாக மாறும்.

ஆனால் சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த தயிர் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த பொடுகு தொல்லைக்கு இன்னொரு சிறந்த மருந்து வெங்காயம். வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு பிறகு குடித்து வர பொடுகு தொல்லை குணமடையும்.

இதுபோல் பேக்கிங் சோடா பொடுகு பிரச்சனைக்கு ஒரு சிறந்த நிவாரணி. ஈரமான தலையில் இந்த பேக்கிங் சோடாவை தேய்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து தலையை அலசி விடவும். இந்த முறை பொடுகு தொல்லைக்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சை சாருடன் ஆரஞ்சு பழ தோலை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு குடித்து வர பொடுகு தொல்லை தீரும்.

Previous articleகாதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 
Next articleமஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!