இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

Photo of author

By CineDesk

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

CineDesk

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

இளமையை எவ்வாறு தக்கவைத்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதாவது சில பேருக்கு 30 வயது எட்டினாலே தோற்றம் மாற துவங்கும். தோளில் சுருக்கம் உடம்பில் பலவீனம் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் தடுத்து நம் உடம்பை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க ஒரு பானத்தை இங்கு காண்போம்.

இந்த வானத்தை தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வந்தால் நாம் இளமையாக அழகாக மாற முடியும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். இப்போது இந்த பானத்தை தயாரிப்பதை குறித்து பார்க்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு புதினா இலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மேலும் அதனுடன் மாதுளம் பழத்தை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு எலுமிச்சம் பழங்களை நாலு துண்டாக வெட்டி பிழியாமல் தண்ணீரில் அப்படியே போட்டு விட வேண்டும்.

இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை தோலை நீக்கிவிட்டு நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். தண்ணீரில் இவற்றையெல்லாம் சேர்த்து இரவு 7 மணி அளவில் மூடி வைத்து விடவும். பிறகு எட்டு மணிக்கு ஒருமுறை மற்றும் ஒன்பது மணிக்கு ஒரு முறை என்று இரண்டு தடவைகள் இந்த தண்ணீரை கலக்கி விட வேண்டும்.

இதை மறுநாள் காலையில் பார்க்கும்போது நாம் போட்ட அனைத்து பொருட்களின் சக்தியும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். பின்பு இதை வடிகட்டி விட்டு இந்த தண்ணீரை நாம் பருகும் பாட்டில்களில் ஊற்றி வைத்து தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வரலாம்.

இவ்வாறு செய்வதால் நிச்சயமாக நம் இளமையும் அழகும் நிறைந்து காணப்படும். இளம் வயதிலேயே வயதான தோற்றம் வராமல் இந்த பானத்தின் மூலம் நாம் தடுக்கலாம். இந்த இளமை தோற்றம் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமாக காணப்படும். மேலும் உடலில் சக்தி குறைந்து காணப்படுதல் பலவீனமாக உணர்தல் என அனைத்து பிரச்சனைகளையும் இந்த பானம் சரி செய்யும்.