வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

0
35

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர்.

இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது.

இவ்வாறு ஒருவருக்கு தேவையான நீதி கிடைக்க வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பது உண்மையான ஒன்றாகும்.

இவ்வாறு நமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நமது தரப்பிலிருந்து நம் பக்கம் உள்ள உண்மைகளும் அதற்கான ஆதாரமும் சரியாக நிரூபிக்கப்பட வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் நமக்கான நீதி கிடைக்கும். ஆகவே உங்கள் தரப்பில் உள்ள உண்மைகள் அல்லது கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்றால் அதற்கு நம் சார்பில் ஒரு வக்கீல் வேண்டும்.

சில சாமானிய மக்கள் வக்கீல்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்க வேண்டும் என்பதால் சில நீதிகளையும் உண்மைகளையும் இழந்து வாழ்கின்றனர். நமது தரப்பில் உண்மை இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வக்கீல்களுக்கு பீஸ் கொடுத்து நமது உண்மையை நிரூபிக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் இல்லை. இதனால் சில நியாயங்கள் மக்களை சென்றடைவதில்லை. இதனை சரி செய்யும் பட்சத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய திட்டம். இனி வக்கீல்களுக்கு பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா ஆனால் அது ஒரு உண்மை.

ஒரு நபர் தன் பக்கம் உள்ள நியாயத்தை கூற வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்கின்றார் என்றாள் legal service authority act இதன்படி கஷ்டப்படுகின்ற ஏழை எளிய மக்களும் நீதி பெற வேண்டும் எந்தவித செலவும் இல்லாமல் வக்கீலை ஏற்படுத்தித் தருமாறு அரசு கூறியுள்ளது. இதற்குப் பெயர்தான் இலவச சட்ட உதவி.

இதுவும் சில குறிப்பிட்ட வழக்குகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் அதாவது ஜீவன வம்ச வழக்கு, பேங்க் லோன் வழக்கு, ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கு, வரதட்சணை கொடுமை போன்ற வழக்கு இதற்கு மட்டுமே இலவச வக்கீல்கள் வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் இலவச ஆலோசனையும் வழங்கப்படும்.

மேலும் இந்த இலவச வக்கீல் பெற வேண்டும் என்றால் அவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழாக தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்கள் ஊர்களில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையம் அங்கு சென்று வருமான வரி சான்றிதழ் பெயர் எதற்கான இந்த வழக்கு போடப்படுகிறது என் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் சரிபார்த்த பின்னர் அரசாங்கமே உங்களுக்கு இலவச வக்கீலை ஏற்பாடு செய்து கொடுக்கும் மேலும் அதற்காக ஆகும் மொத்த செலவையும் அரசே கொடுத்து விடும்.

இதிலும் நேரில் செல்ல முடியவில்லை என்றால் NALASA.GOV.IN இணையதளத்தின் வழியாக ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.இதன்மூலம் ஏராளமான சாமானிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

author avatar
Parthipan K