நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 5 நிமிடத்தில் நீங்க இதை செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 5 நிமிடத்தில் நீங்க இதை செய்து பாருங்கள்!!

மலச்சிக்கல் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை பழத்தால் இந்த பாதிப்பை நாம் சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது நல்லது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*எளிதில் செரிமானம் ஆகாத உணவு

*மன அழுத்தம்

*தேவையான நீர் பருகாமல் இருத்தல்

*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு

*உடல் சோர்வு

*உடல் நலக் கோளாறு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*வாழைப்பழம்

*தயிர்

*ஆளிவிதை

*ஸ்ட்ராபெரி

செய்முறை:-

முதலில் பாதி வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர், 1 ஸ்ட்ராபெரி பழத்தை போட்டு தண்ணீர் ஊற்றமால் மைய்ய அரைத்துக் ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி ஆளிவிதையை அதில் சேர்த்து கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் நீண்ட நாட்களாக உடலில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவதும். பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி குடிக்கவும். இதை காலையில் எழுந்ததும் செய்ய வேண்டும்.

பின்னர் 5 முதல் 7 உலர் திராட்சையை சாப்பிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.