கண்ணை சுற்றி இருக்கும் கருப்பு நீங்க இந்த மேஜிக் ஆயிலை ட்ரை பண்ணுங்க!! ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!
நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு.ஆனால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகி விட்டால் அவை முக அழகை முழுமையாக கெடுத்து விடும்.
கருவளையம் உருகாகக் காரணங்கள்:-
முறையற்ற தூக்கம்,இரத்த சோகை,கண்களை முறையாக பராமரிக்க தவறுதல்,மின்னனு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துதல் ஆகியவை கருவளையம் ஏற்பட காரணமாக உள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை:-
10 பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.
இந்த பாதாம் எண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் முழுமையாக நீங்கி விடும்.
பாதாமில் உள்ள மெக்னீசியம,கொழுப்பு அமிலம்,வைட்டமின் ஏ,டி,இ கண் கருவளையத்தை போக்க உதவுகிறது.