அல்சர்? குணமாக்க உதவும் “தேங்காய்” – இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இதை எந்த வித சிரமமும் இன்றி குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துண்டு
2)வெந்தயம்
3)வேப்பிலை பொடி
4)இந்துப்பு
செய்முறை:-
ஒரு கப் அளவு தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
அதேபோல் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
அரைத்த தேங்காய் பாலில் வெந்தயப் பொடி மற்றும் வேப்பிலை பொடி போட்டு கலக்கவும். பிறகு சிறிது இந்துப்பு போட்டு கலக்கி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அல்சர் புண் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல்
2)மோர்
செய்முறை:-
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கொள்ளவும்.
இந்த ஜெல்லை மூன்று அல்லது நன்கு முறை தண்ணீரில் போட்டு அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸ் மோரில் போட்டு கலந்து குடிக்கவும். இந்த மோர் பானம் வயிற்றில் உள்ள அல்சர் புண்ணை முழுமையாக குணமாக்கும்