அல்சர்? இந்த பாதிப்பை சரி செய்ய இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது..!!

0
170
#image_title

அல்சர்? இந்த பாதிப்பை சரி செய்ய இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது..!!

அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றில் வீக்கம், நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். பொதுவாக காலை உணவை தவிர்ப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கமும் முக்கிய காரணம் ஆகும்.

வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக் கூடிய புண்களை அல்சர் என்று சொல்கிறோம்.இந்த புண்களை ஆரம்ப நிலையில் கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் பால்

*வெந்தயம்

*சீரகம்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1/4 மூடி தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். இதை சீரகம், வெந்தயம் உள்ள கிண்ணத்தில் வடிகட்டி நன்கு கலந்து குடிக்கவும்.

தேங்காய் பால் அல்சருக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் ஆகும். சீரகம் உண்ணும் உணவை செரிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த மூன்றையும் உட்கொள்ளவதால் குடற்புண் நீங்கி அல்சர் பாதிப்பு விரைவில் குணமாகும்.