எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.202

நாள் : 07.08.2020

தமிழ் மாதம்: ஆடி 23 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 முதல் 04.30
குளிகன்: காலை 07.30 முதல் 09.00 வரை.

திதி:

சதுர்த்தி திதி இரவு 02.06 வரை அதன் பின் தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம் :

பூரட்டாதி பகல் 1.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் ஒரு சில தொந்தரவுகள் வரக்கூடும்.உறவினர்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் சுபகாரியங்களில் தடை செய்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புத் தந்து வந்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் வரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மிகவும் புத்துணர்வான நாளாகும்.எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.உங்களின் முயற்சிக்கு உங்களது குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் ரீதியாக பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் நலம் மிகவும் சிறப்புடன் காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பணவரவு தட்டுப்பாடின்றி வரும். ஆரோக்கியமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று ஒரு புது தெம்புடன் பணியாற்றுவீர்கள்.தொழிலில் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டாலும் பெருமளவு பாதிப்புகள் வராது.குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகள் வந்து மறையும். பணவரவு ஓரளவு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர்களுடன் பேசும்பொழுது பார்த்துப் பேசுங்கள். வியாபாரத்தில் பெரிய தொகையை செலுத்தாதீர்கள். பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நற்செய்தி வரும்.திருமணப் பேச்சுக்கள் கைகூடி நற்பலனைத் தரும். குடும்ப பிரச்சினை மறையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

துலாம்:

துலா ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மிகவும் அமோகமாக நாள் என்றே கூறலாம்.தொழில், புகழ்,செல்வாக்கு என அனைத்தும் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் பலனைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்மை தரும். அமோகமான நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு செலவு நேரிடலாம். வரவை விட செலவு அதிகமாகும்.அலுவலகத்தில் மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு வந்து நிற்கும். எதிர்பார்த்த உதவி கிட்டும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று செய்யும் எந்த காரியத்திலும் இன்று கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவும்.நண்பர்களின் பேச்சுக்களை கேளுங்கள். அது ஒரு நல்ல தீர்வாக அமையும்.வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை சீக்கிரம் கை வந்து சேரும். வாய்ப்புகள் அமையும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி வீடு வந்து சேரும்.தொழிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அவரவர் செய்த வேலைக்கு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார வகையில் ஒரு சில நெருக்கடிகள் வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அனுகூல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருக்கடியான நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் முக்கியமான ஒரு சில பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உறவினர்களின் மகிழ்ச்சியால் வீடு கலைகட்டும். சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உத்யோகம் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வர வாய்ப்பு வரும்.

லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நடந்த பெரும் வெடி விபத்து சம்பவம் பெரும் சேதங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல் சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அதற்கு காரணம், அந்த துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் மருந்து தான் அப்பெரு வெடி விபத்து சம்பவத்திற்கு காரணமாக இருந்தது. இந்த வெடி விபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் … Read more

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன.இதில் இந்தியாவை உட்பட சில நாடுகளில் இரண்டாம் கட்டம் 3 கட்டம் என தடுப்பு மருந்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள, ‘வெக்டார்’ கிருமி ஆய்வு மையத்தில் கொரோன வைரஸை கொள்ள தண்ணீரை வைத்து பரிசோதனை செய்தனர்.அவர்களின் ஆய்வு வீணாகவில்லை.அவர்கள் எதிர் பார்த்தவாரே வைரஸை கொள்ளும் திறன் தண்ணீருக்கு உள்ளது … Read more

ஓடி ஒளிந்து கொள்பவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! தமிழக முதல்வர்!

ஓடி ஒளிந்து கொள்பவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! தமிழக முதல்வர்!

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார்.இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் அதிமுக உருப்படும் அப்பதான் நீங்க திரும்ப வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நேற்று … Read more

லாபத்தில் சரிவு ஏற்பட்டதால் 35 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல வங்கி!

லாபத்தில் சரிவு ஏற்பட்டதால் 35 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல வங்கி!

கரோனோ வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முடங்கி இருக்கிறது. இதனால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. இதனை மீட்க கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது வங்கிகள் தான்.   இந்த இடைக் காலங்களில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட பணி இழப்பு செய்யப்போவதாக எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாக 13 பில்லியன் டாலர்கள் வாராக் கடனாக உயரும் என்று அந்த வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே திட்டமிட்டபடி மறு கட்டுமான திட்டத்திற்கு வாராக் கடன் தோதாக … Read more

டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது இதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாவட்ட … Read more

பாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!

பாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!

ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார்.மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது இவருக்கு எப்படி பொறுப்பு வழங்கப்பட்டது என்று? உட்கட்சி பூசல் உருவானது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க செல்வம் இந்த மாவட்ட செயலாளர் பதவியை … Read more

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக … Read more

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக … Read more

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட் ! புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்  “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் … Read more