தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

Photo of author

By Divya

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தற்காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதினாலலும், ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவைகளாலும் இந்த வலி ஏற்படுகிறது.

அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கற்பூரம் – 3

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் பூஜைக்கு பயன்படுத்தும் சூடத்தை(கற்பூரம்) தூள் செய்து அதில் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த தேங்காய் எண்ணெய் + கற்பூர கலவையை மூட்டுகளின் மேல் தடவவும்.இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது.மூட்டுகள் சூடு பொறுக்கும் அளவிற்கு எண்ணெய் காய்ச்சினால் போதும்.இவ்வாறு தொடர்ந்து மூட்டுகளின் மேல் தடவி வருவதன் மூலம் மூட்டுவலி பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கடுகு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*பூண்டு பற்கள் – 2

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு கடுகு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.

பின்னர் 2 பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூடேறி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

பூண்டு பொன்னிறமாக வந்ததும் அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை சிறிது நேரம் ஆறவைத்து பின்னர் மூட்டுகளின் மேல் தடவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டுவலி பாதிப்பு விரைவில் சரியாகிவிடும்.