கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கழுத்து வலி. இவை ஏற்பட்டு விட்டால் எந்த ஒரு வேலை செய்வதும் கடினமாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, வேலைப்பளு உள்ளிட்டவைகள் ஆகும்.

அதுமட்டும் இன்றி உறக்கத்தின் போது கழுத்தை ஒரே பக்கமாக வைத்த நிலையில் படுத்தல், கழுத்து பகுதியில் ஏதேனும் அடிபட்டால் கழுத்து வலி ஏற்படும்.

கழுத்து வலி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தில் ஏதேனும் ஒன்றை முயற்சித்து பார்த்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

1)சிறிதளவு நல்லெண்ணெயில் நொச்சி இலை சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வலி சில தினங்களில் குணமாகும்.

2)கண்டந்திப்பிலியை பொடியாக்கி பாலில் கலந்து பருகினால் கழுத்து வலி விரைவில் குணமாகும்.

3)கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.

4)ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்து கலந்து காட்டன் துணி வைத்து நினைத்து கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் அவை விரைவில் குணமாகும்.