ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!

கூடிப்போன உடல் எடையை குறைக்க பலர் போராடி வருகின்றனர். உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடிய உணவை அதிகளவில் உட்கொள்வதால் பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. இந்த உடல் எடை பாதிப்பை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கான இயற்கை வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:

*வெற்றிலை
*கிராம்பு(இலவங்கம்)
*சீவல்

இரண்டு வெற்றிலையை எடுத்து அதன் மீது 2 கிராம்பு மற்றும் சிறிது சீவல் (கொட்டை பாக்கில் இருந்து தயாரிக்க கூடிய பொருள்) சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இவ்வாறு 15 நாட்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்… நிச்சயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்யமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*வெற்றிலை
*சீரகம்
*ஓமம்

ஒரு வெற்றிலை எடுத்து அதில் 1/2 ஸ்பூன் சீரகம் மற்றும் 1/4 ஸ்பூன் ஓமம் வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:

*வெற்றிலை
*மஞ்சள்
*மிளகு
*பூண்டு

ஒரு பாத்திரத்தில் வெற்றிலை துண்டுகள், இடித்த மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடித்து வர உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.