மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற வெந்தயத்தை இப்படி பயன்படுத்துகள்! 100% ரிசல்ட் கிடைக்கும்!!
நம்மில் பலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதனால் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை.
ஆனால் நவீன காலத்தில் அனைத்தும் மாறிவிட்டால் நம் உடல் எளிதில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி விடுகிறது.
இந்நிலையில் பற்களின் மஞ்சள் நிறம் போக தேங்காய் எண்ணெய் கொண்டு வாயை நன்கு சுத்தம் செய்யலாம்.அதேபோல் வாழைப்பழத்தோல் கொண்டு பற்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்யலாம்.பல் துலக்கும் பிரஷில் பேஸ்ட்,உப்பு சிறிதளவு அதனுடன் சோடா சிறிதளவு சேர்த்து பற்களை துலக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல் வெந்தயம் பயன்படுத்தி அசிங்கமான மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள்:-
*வெந்தயம்
*தண்ணீர்
செய்முறை:-
1.வெந்தயத்தை நிழலில் காயவைத்து அவற்றை வறுத்து பொடி செய்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.
2.ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள வெந்தய பொடி 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
3.இரவு உணவு உண்ட பின்னர் இந்த தண்ணீரை கொண்டு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.இந்த தண்ணீரை வாயில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் வரை வாயை கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பற்களின் மேல் படிந்திருக்கும் மஞ்சள் கறை நீங்கி அவை வெள்ளையாக காணப்படும்.