முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

0
135
#image_title

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல்.

தலை முடி உதிரக் காரணம்:-

*பொடுகு

*தலை அரிப்பு

*உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்

*இரத்த சோகை

*ஜீன் குறைபாடு

*தலைமுடி வறட்சி

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*வாழைப்பழம்

*தேன்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் வாழைப்பழம் ஒன்றை தோல் நீக்கி மசித்து கொள்ளவும். பிறகு அதில் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வருவதன் மூலம் முடி உதிர்வு பாதிப்பு நின்று முடி அடர்தியாகவும், கருமையாகவும் வளரும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*முட்டை

*ஆலிவ் ஆயில்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கலந்து விடவும். பின்னர் 2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விட்டு பின்னர் ஷாம்பு உபயோகித்து தலை முடியை அலசிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் தலை முடி உதிர்வு நின்று முடி அடர்த்தியாக வளரும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ;அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும் படி தடவி 30 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர் தலைக்கு ஷாம்பு உபயோகித்து தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தோம் என்றால் தலை முடி அடர்த்தியாக வளரும்.