உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

Photo of author

By Divya

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடல் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்க அஞ்சும். நம் உடலை வலிமையாக்க மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயல். உடலை ஆரோக்கியமான முறையில் இரும்பு போல் வலுவாக்க வெந்தயம், அரிசி, கருப்பு உளுந்து பயன்படுத்தி களி செய்து சாப்பிடவும்.

வெந்தயக் களி பயன்கள்..

*எலும்பு வலுப்பெறும்.
*பெண்களுக்கு கருப்பை பிரச்சனை சரியாகும்.
*இரத்த ஓட்டம் சீரக இருக்கும்.
*நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
*மூட்டுவலி, இடுப்பு வலி, கை கால் வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*வெந்தயம் – 3 ஸ்பூன்
*அரிசி – 2 ஸ்பூன்
*கருப்பு உளுந்து – 3 ஸ்பூன்

செய்முறை…

ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் அரிசி, 3 ஸ்பூன் கருப்பு உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி சில மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து 400 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து காய்ச்சி வெந்து கொண்டிருக்கும் வெந்தயக் களியில் ஊற்றி நன்கு கலந்து விடவும். களி நன்கு வெந்து வந்ததும் ஆறவிட்டு சாப்பிடவும்.