தலை முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்!!
பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது. இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய் – 1 1/2 லிட்டர்
*செம்பருத்தி இலை – 1 கப்
*வேப்பிலை – 1/2 கப்
*செம்பருத்தி பூ – 10
*கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி
*கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு
*கருவேப்பிலை – 1 கப்
*மருதாணி – 1 கப்
*வெந்தயம் – 5 தேக்கரண்டி
*கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி
*பெரிய நெல்லிக்காய் – 2
*அவுரி பொடி – 2 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு பெரிய இரும்பு கடாய் வைத்து அதில் 1 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலை, 1 கப் செம்பருத்தி இலை, 1/2 கப் வேப்பிலை, 10 செம்பருத்தி பூ, 1 கப் கருவேப்பிலை, 1 கப் மருதாணி, 5 தேக்கரண்டி வெந்தயம், 3 தேக்கரண்டி கருஞ்சீரகம், 2 பெரிய நெல்லிக்காய், 2 தேக்கரண்டி அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சூடாகி கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெயில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு காய்ச்சவும். இவ்வாறு மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை காய்ச்சினால் விழுதுகளின் சத்துக்கள் அனைத்தும் தேங்காய் எண்ணெயில் கலந்து தேங்காய் எண்ணெய் நிறம் மாறத் தொடங்கும்.
பின்னர் அடுப்பை அணைத்து தேங்காய் எண்ணெயை நன்கு ஆற விடவும். பிறகு அதை ஒரு ஈரம் இல்லாத சுத்தமான பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை தலை முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று முடி கருமையாகும், அடர்த்தியாவும் வளரத் தொடங்கும்.