தினமும் கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
69
#image_title

தினமும் கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் வீட்டு உணவுகளின் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த கொத்தமல்லி விதையில் அதிகளவு இரும்புச் சத்துக்கள், புரோட்டீன்,பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது.

கொத்தமல்லி நீர் தயார் செய்யும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி அளவு

*தண்ணீர் – 1 1/4 கிளாஸ்

செய்முறை:-

1 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதை எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 நாள் இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

இவை நன்கு கொதித்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு எதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*கண் தொடர்பான நோய் பாதிப்பு இருக்கும் நபர்கள் தினமும் கொத்தமல்லி நீர் பருகி வந்தால் அந்த பாதிப்பு முழுமையாக நீங்கி விடும். காரணம் இந்த கொத்தமல்லி விதையில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருக்கிறது.

*எலும்பு பலம் பெற கொத்தமல்லி நீர் பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்பு தொடர்பான பாதிப்புகள் நீங்கி அவை வலுவாக இருக்கும்.

*பெண்கள் வெள்ளைப்படுதல் பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த சோகை நோயை குணமாக்க தினமும் கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.