இந்த ஒரு தோலை பயன்படுத்துங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
நமது இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி வரை இருந்தால் நமக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.அதுவே இரத்தத்தில் சர்க்கரை அளவு 125 மி.கி தாண்டி விட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சிக்கவும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)கருஞ்சீரகம்
3)ஓமம்
4)பாகற்காய்
5)எலுமிச்சை தோல்
செய்முறை:-
ஒரு கப் அளவு பாகற்காய் துண்டுகளை வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அதேபோல் எலுமிச்சம் பழத் தோலை காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
எலுமிச்சை தோல் பொடி, பாகற்காய் பொடி மற்றும் வறுத்து அரைத்த பொடி. இதை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்காகி எடுத்துக் கொள்ளவும்.
இந்த தண்ணீரில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.