இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!
சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அதிகளவு நீர் அருந்தினால், நீரிழிவு நோய் பாதிப்பு, காலநிலை மாற்றம்(மழைக்காலம்) இதுபோன்ற பல காரணங்களால் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நபர்கள் நீண்ட தூர பயணம், இரவு நேரம் இதுபோன்ற சமயங்களில் பெரும் அவதிப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)கடல் அழிஞ்சில்
2)பருத்தி விதை
செய்முறை:-
1.ஒரு தேக்கரண்டி கடல் அழிஞ்சில் மற்றும் ஒரு தேக்கரண்டி பருத்தி விதை எடுத்துக் கொள்ளவும்.
2.இந்த பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 400 மில்லி அளவு தண்ணீர் ஊற்றவும்.
3.இதை அடுப்பில் வைத்து 400 மில்லி தண்ணீர் 200 மில்லியாக வரும் வரை கொதிக்க விடவும்.
4.பிறகு அடுப்பை அணைத்து விடவும். கடல் அழிஞ்சில் + பருத்தி விதை தண்ணீரை 5 நிமிடங்களுக்கு தட்டு போட்டு மூடி விடவும்.
5.பிறகு பானம் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது ஒரு டம்ளருக்கு வடிகட்டி குடிக்கவும்.
6.இந்த பானத்தை காலை மற்றும் மாலை என இருவேளை குடித்து வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு முற்றிலும் நின்று விடும்.