வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Parthipan K

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து கோவில்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தனர் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து அஜாக்கிரதையாக வாகம் ஓட்டியதாக பிக் அப் வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.