“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!

Photo of author

By CineDesk

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!

CineDesk

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!

இந்தியாவில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019  ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று மொத்தம் 24  Zவழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வந்தே பாரத் ரயிலானது முதலில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையில் துவங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது.

இந்த ரயில் சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனைத் தொடர்ந்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ரயில் சேவை அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 6  அன்று துவங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

இதனால் தென் மாவட்ட மக்கள்  மிகவும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் முதலில் எட்டு பெட்டிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டை பொருத்து கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற ரயில்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்வதற்கு பத்து மணி நேரம் ஆகும்.

ஆனால் வந்தே பாரத் ரயிலில் வெறும் எட்டு மணி நேரத்திலே சென்றடைந்து விடலாம். இதில் கட்டணம் அதிகம் என்றாலும் பயண நேரம்க் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலை விரும்புகின்றனர்.