மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!!

0
35
Problem in providing textbooks to students!! The court ordered the school education department to take action!!
Problem in providing textbooks to students!! The court ordered the school education department to take action!!

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.அதிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெரும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகின்றது பள்ளி கல்வித்துறை.

அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை என்கின்ற சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 25 சதவீத கட்டாய கல்வி என்ற உரிமையின் கீழ் தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வரும் ஏழை எளிய மாணவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இப்படி சேர்க்கப்படும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்திவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வறுமை கோடிற்கு கீழ் உள்ள அரசின் கட்டாய கல்வி என்ற சட்டத்தின் கீழ் சேர்ந்த சுவேந்தன் என்கின்ற மாணவன் அந்த பள்ளியில் சேர்த்துள்ளார்.

அவருக்கு அந்த பள்ளியில் பாட புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்ததால் அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக மாணவனுக்கு பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்த பள்ளி கல்வித்துறை அரசின் கட்டாய கல்வி என்ற திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் சீருடையை வழங்கு பொறுப்பை அரசு ஏற்கும் என்றும் நிதிசுமை ஏற்பட்டுள்ளதால் கருவூலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை செப்டம்பர் 14 ம் தேதி ஒத்தி வைக்கபடுகின்றது.

author avatar
Parthipan K