மலச்சிக்கலுக்கு 1 மணி நேரத்தில் முழு தீர்வு வேண்டுமா? அப்போ இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

மலச்சிக்கலுக்கு 1 மணி நேரத்தில் முழு தீர்வு வேண்டுமா? அப்போ இவ்வாறு செய்யுங்கள்!

உடலில் தேவையான தண்ணீர் இல்லாமல் போனாலும், நார்சத்து குறைபாடு, மலத்தை அடக்கி வைத்தாலும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இன்றி உணவு முறை பழக்கம், மன அழுத்தம் ஆகியவையும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இந்த மலச்சிக்கல் பாதிப்பை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.

தீர்வு 01:-

10 எலுமிச்சை இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து அருந்தினால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

தீர்வு 02:-

கடுக்காய் மற்றும் நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி நீர் விட்டு பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

தீர்வு 03:-

கொத்தமல்லி, மிளகு, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 04:-

அத்திப்பழத்தை உலர்த்தி சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சில தினங்களில் அகலும்.

தீர்வு 05:-

அகத்தி கீரையை உலர்த்தி பொடியாக்கி 1 கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு அகத்தி கீரை பொடி சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் தேங்கி கிடந்த மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.