படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

0
227
#image_title

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 8 மணி நேரம் உறக்கம் அவசியம் ஆகும். ஆனால் வேலைப்பளு, மன அழுத்தம், உடல் நலக் கோளாறு இருந்தால் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருக்காது.

மேலும் நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டதால் தூங்க வேண்டிய நேரத்தில் உணவு அருந்துவது, எழ வேண்டிய நேரத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்குவது என்று மாறி மாறி செய்வதினால் உடலில் பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே உரிய நேரத்தில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் இயற்கை வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

*இந்துப்பு

*ஆர்கானிக் பழுப்பு சர்க்கரை

*தேன்

செய்முறை…

1)ஒரு பிளாஸ்டிக் பையில் இந்துப்பு 2 தேக்கரண்டி, ஆர்கானிக் பழுப்பு சர்க்கரை 2 தேக்கரண்டி, தேன் 4 தேக்கரண்டி சேர்த்து நன்றாக குலுக்கி கொள்ளவும்.

2)இதை இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன் நாவின் அடியில் தடவி விடவும். இவ்வாறு செய்தால் இரவு தூக்கம் நன்றாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பால்

*கசகசா

*நாட்டு சர்க்கரை

செய்முறை…

1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும்.

2)பால் சூடாகும் பொழுது 1 ஸ்பூன் கசகசா சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

3)பின்னர் இவை இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் 10 நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வரும்.