உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஒரு இரவில் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
54
#image_title

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஒரு இரவில் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் முறையற்ற உணவு முறையின் காரணமாக எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். வாய்க்கு ருசியை தேடும் நாம் உடல் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல வித நோய் பாதிப்புகளை விரைவில் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

உடல் எடை கூட என்ன காரணம்?

*ஹோட்டல் உணவை உட்கொள்வது

*அடிக்கடி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ளுதல்

*பொரித்த, வறுத்த உணவை உண்பது

*சரியான தூக்கம் இல்லாமை

*மன சோர்வு மற்றும் மன அழுத்தம்

*உடல் உழைப்பு இல்லாமை

*அளவுக்கு மீறி உணவு உண்பது

தேவையான பொருட்கள்:-

*கொள்ளு

*பூண்டு

*மஞ்சள் தூள்

*மிளகு

*சீரகம்

*உப்பு

*எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 1/4 கப் கொள்ளு சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

தொடர்ந்து 5 பல் பூண்டு, 1/4 தேக்கரண்டி மிளகு, 1/4 தேக்கரண்டி சீரகம், சிட்டிகை அளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 5 துளி எண்ணெய் விட்டு 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

பின்னர் விசில் நின்றதும் தயார் செய்து வைத்துள்ள கொள்ளு சூப்பை ஒரு பவுலுக்கு ஊற்றி சூடாக இருக்கும் பொழுது பருகவும்.

இந்த சூப்பை இரவு சாப்பாட்டுக்கு பின்னர் செய்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.