அடர்த்தியான புருவம் வேண்டுமா..? அப்போ இதை அங்கு அப்ளை பண்ணுங்க..!!
நம் முக அழகை அதிகரிக்க செய்யும் புருவங்களை அடர்த்தியாக வளரவைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
1)பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை புருவங்கள் மீது தடவினால் புருவங்கள் விரைவில் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். இதில் உள்ள ஒமேகா -3, வைட்டமின் ஈபுருவங்களை அடர்த்தியாக்க உதவுகிறது.
2) ஜோஜோபா எண்ணெய்
புருவ வளர்ச்சிக்கு ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்தவும். இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புருவங்களை கருமையாக்க உதவுகிறது. இதற்கு ஜோஜோபா எண்ணெயில் தேங்காய் எண்ணெய் கலந்து இரவு தூங்கும் முன் தடவவும்.
3)தேங்காய் எண்ணெய்
இங்த தேங்காய் எண்ணெய் தடவுவது புருவம் வளர உதவுகிறது. இதற்கு, 1 தேக்கரண்டி எண்ணெயில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து புருவங்களின் மீது மஜாஜ் செய்யவும்.
4)விளக்கெண்ணெய்
இந்த விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி அளவு எடுத்து புருவங்கள் மீது தடவினால் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
5)கற்றாழை ஜெல்
கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை தனியாக பிரித்து புருவங்களின் மீது தடவி வர அவை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
6)வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
இந்த வைட்டமின் ஈ காப்ஸ்யூல் ஒன்றை புருவங்களின் மேல் தடவினால் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.