தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

Photo of author

By Divya

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

Divya

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

தலைமுடி அழகாக இருந்தால் அவை தனி தைரியம், தன்னம்பிக்கை கொடுக்கும். ஆண், பெண் அனைவரும் ஆசைகொள்வது முடி கருமையாவும்.. அடர்த்தியாகவும்.. இருக்க வேண்டும் என்பது தான்.

இதற்காக என்ன தான் கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தினாலும்.. அவை இயற்கை பொருட்கள் மூலம் கிடைக்கும் பலனிற்கு அருகில் கூட நெருங்க முடியாது.

முட்டையின் வெள்ளை கரு
சின்ன வெங்காயச் சாறு

ஒரு முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தடவி சிறிது நேரம் ஊற விட்டு அலசிக் கொள்ளவும்.

அடுத்து தலைக்கு தேவையான அளவு வெங்காயச் சாறு எடுத்து அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்தால் கூந்தல் வளர்ச்சி அசுர வேகம் பெறும்.

தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை

ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெயில் 1 கொத்து கறிவேப்பிலை போட்டு ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்
வெட்டி வேர்
வெந்தயம்

ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெயில் சிறிது வெட்டிவேர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவிட்டு தலைக்கு தேய்த்து வந்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.