வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!

0
195
#image_title

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!

குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை வெளியேற்ற கீழ் ;கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்புகளை பின்பற்றவும்.

தீர்வு 01:-

*குப்பைமேனி வேர்

அதிக மருத்துவ குணம் நிறைந்த குப்பைமேனி வேர் சிறிது எடுத்து சுத்தம் செய்து 1 கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

தீர்வு 02:-

*எருக்க இலை
*விளக்கெண்ணெய்

சிறிது எருக்க இலையை அரைத்து சாறு எடுத்து அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தீர்வு 03:-

*வாழைத்தண்டு

சிறு துண்டு வாழைத்தண்டை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர வறண்ட மலம் இளகி வரும்.

தீர்வு 04:-

*மோர்

காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் மோர் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தீர்வு 05:-

*சோம்பு பொடி

ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் சோம்பு பொடி சேர்த்து கலக்கி குடித்தால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும்வெளியேறும்.

தீர்வு 06:-

*வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி விளக்கெண்ணெயில் ஊறவைத்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலும் நிமிடத்தில் குணமாகிவிடும்.