10 நிமிடத்தில் சளி தொல்லை நீங்க வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

10 நிமிடத்தில் சளி தொல்லை நீங்க வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது.

அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – ஒரு துண்டு

*துளசி – 1/2 கைப்பிடி அளவு

*தேன் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/2 கைப்பிடி அளவு துளசி இலைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஓரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் உரலில் எடுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து இடித்து கொள்ளவும்.இதை ஒரு பவுலில் சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள 1 துண்டு இஞ்சி சேர்த்து இடித்து கொள்ளவும். இதையும் அதே பவுலில் சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அந்த பவுலில் சிறிதளவு தேன் கலந்து பருகவும்.1 வயது முடிந்த குழந்தை என்றால் இதில் 1/2 தேக்கரண்டி அளவு கொடுக்கலாம்.3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு 1 தேக்கரண்டி கொடுக்கலாம்.5 முதல் 8 வயது குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுக்கலாம்.8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 3 தேக்கரண்டி அளவு கொடுக்கலாம்.அதற்கு மேல் இருப்பவர்கள் 1/4 டம்ளர் பருகலாம்.