தீராத நெஞ்சு சளித் தொல்லை 1 மணி நேரத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இந்த பவர் புல் கஷாயத்தை செய்து குடிங்க!!
மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் எளிதில் ஏற்பட்டு விடும். சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் அவை தீவிர நெஞ்சு சளியாக மாறி விடும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி கஷாயம் தயார் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
உடலில் சளி உருவகக் காரணம்:-
*குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல்
*அதிக இனிப்பு உண்ணுதல்
*மழை காலங்களில் சளி பாதிப்பு ஏற்படுதல்
*குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்தல்
*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
சளி தொல்லை நீங்க கஷாயம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை
*கருந்துளசி
*மிளகு
*மஞ்சள்
செய்முறை:-
அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒரு உரலில் சிறிதளவு கருந்துளசி மற்றும் வெற்றிலையை போட்டு இடித்துக் கொள்ளவும்.
இதை சூடேறிக் கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். அடுத்து 1 தேக்கரண்டி கரு மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இந்த இடித்த மிளகு மற்றும் மஞ்சளை கொதிக்கும் நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் மலம் வெளியேறிவிடும்.