கழுத்து பகுதியை சுற்றியுள்ள அழுக்கு படிந்த கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

0
36
#image_title

கழுத்து பகுதியை சுற்றியுள்ள அழுக்கு படிந்த கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோருக்கு கழுத்து கருமை பாதிப்பு இருக்கிறது.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாற தொடங்குகிறது.அதேபோல் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்பட்டாலும் கழுத்து கருமை உருவாகும்.

இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாள்பட்ட கழுத்து கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*கோதுமை மாவு – 1 தேக்கரண்டி

*பசும்பால் – 1/4 டம்ளர்

*ஓட்ஸ் – 1 தேக்கரண்டி

*பச்சை பயறு மாவு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஓட்ஸ் 1 தேக்கரண்டி போட்டு பொடி செய்து கொள்ளவும்.பிறகு அதை ஒரு பவுலில் சேர்க்கவும்.அதோடு 1 தேக்கரண்டி கோதுமை மாவு மற்றும் 1 தேக்கரண்டி பச்சை பயறு மாவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு பசுப்பால் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து கழுத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு 2 அல்லது 3 தேக்கரண்டி பசும்பாலில் ஒரு பஞ்சு வைத்து நினைத்து கழுத்து சுற்றியும் தேய்த்து எடுக்கவும்.இப்படி செய்தால் கழுத்தில் படிந்து கிடந்த அழுக்கு நீங்கும்.

பிறகு தயார் செய்து வைத்துள்ள கலவையை கழுத்தை சுற்றி தடவும்.20 அல்லது 30 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் கழுத்தில் உள்ள கருமை அனைத்தும் நீங்கும்.