ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

Photo of author

By Divya

ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

பாத வெடிப்பு பிரச்சனை அனைவருக்கும் வருகின்ற பொதுவான பாதிப்பு தான். இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். இதனால் பாத எரிச்சல், வீக்கம், வலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது.

பாத வெடிப்பு ஏற்படக் காரணம்:-

*பாதத்தை நீண்ட நேரம் தண்ணீரில் இருத்தல்

*பாதங்களுக்கு சோப்பு தண்ணீர் சேராமை

*அலர்ஜி

இந்த பாத வெடிப்பு நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது. இந்த பாதிப்பை இயற்கை முறையில் சரி செய்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு

*மஞ்சள் கிழங்கு – 1

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை எடுத்து ஒரு உரலில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து காய்ந்த மஞ்சள் கிழங்கு ஒன்றை எடுத்து உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். இதையும் மருதாணி அரைத்து வைத்துள்ள பவுலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

இரவு தூங்குவதற்கு முன் பாதங்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து துடைத்து கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணெயை பாதம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள மருதாணி, மஞ்சள் கலவையை வெடிப்பு இருக்கும் இடங்களில் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.

மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீர் கொண்டு கால் பாதங்களை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் பாத வெடிப்பு முழுமையாக மறைந்து விடும்.