முக அழகைக் கெடுக்கும் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய ஆசையா? அப்போ இதை செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

முக அழகைக் கெடுக்கும் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய ஆசையா? அப்போ இதை செய்து பாருங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடும். இந்த முகப்பருக்களை சரி செய்ய ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது.

முகப்பரு வரக் காரணம்:-

*அதிக எண்ணெய், நெய், வெண்ணெய் உணவு உண்ணுதல்

*கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட் உள்ளிட்டவைகளை உண்ணுதல்

*அதிகளவு கோழி இறைச்சி உண்ணுதல்

*துரித உணவு உண்ணுதல்

*இரசாயனம் கலந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்துதல்

முகப் பருக்கள் நீங்க சிறந்த வழிகள்:

**எலுமிச்சைச் சாறு மற்றும் பன்னீர் சம அளவு கலந்து முகத்தில் தடவி வருவதன் மூலம் முகபருகள் நீங்கும்.

**வேப்பங்கொழுந்தை அரைத்து முகத்திற்கு தடவி வருவதன் மூலம் முகப்பரு பாதிப்புகள் நீங்கும்.

**ரோஜா பூ இதழ்களை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் முகத்தை கழுவி வருவதன் மூலம் முகப்பருக்கள் நீங்கும்,

**கற்றாழை மடலின் தோலை நீக்கி அதன் ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முகப்பருக்கள் நீங்கும்.

**கீரைகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை அடிக்கடி எடுத்து வருவதால் முகம் பொலிவாக இருப்பதோடு பருக்கள் வராமல் இருக்க உதவும்.

**அடிக்கடி முகத்தை கழுவுதல், ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுதல், தினமும் குறைந்தது 1 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் நடப்பது உள்ளிட்டவற்றை செய்வதன் மூலம் பருக்கள் பாதிப்புகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.