ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

0
172
#image_title

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தாக என்ன கொடுக்கலாம் என ஒவ்வொரு தாய்மார்களும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதோ உங்களுக்கான எளிமையான செய்முறையில் 3 பொருட்களைக் கொண்ட சுவையான சத்தான லட்டு ரெசிபி.

இதற்கு தேவையான பொருட்களை ஒரே கப்பை பயன்படுத்தி அளந்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு – 1 கப்

2. வறுத்த வேர்க்கடலை – 1 கப்

3. வெல்லம் – 11/4 கப்

மேற்கண்ட அளவு முறைகள் மிகவும் சரியான அளவில் இருக்கும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விடவும். அதில் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அடுத்து வேர்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டோ அல்லது தோலுடனோ அரைத்துக் கொள்ளலாம். பின்னர் அரைத்த வேர்க்கடலையை கோதுமை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொடித்த வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் கரைந்ததும் இதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வெல்லம் நன்கு கொதித்ததும் அதில் கோதுமை மாவு மற்றும் வேர்க்கடலை மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து 2 நிமிடம் நன்கு வேக விடவும். வெந்ததும் லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

ஆறியதும் கையில் நெய்யை தடவிக் கொண்டு லட்டாக பிடிக்கலாம். இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 4 முதல் 5 நாட்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.

அதிகளவு புரோட்டின் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடிய ஹெல்த்தியான லட்டு இது.