கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

0
219
#image_title

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கிட்ட பார்வை ,தூர பார்வை என்ற கண் சம்பந்தமான பிரச்சினைகள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு உண்டாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துவதனாலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்துவதாலும் இந்த பார்வை குறைபாடு உண்டாகிறது. இந்த கண் குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் இரண்டு ஸ்பூன் அளவு சோம்பு, 15 பாதாம் பருப்பு ,பெரிய கற்கண்டு 5, இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களிலும் விட்டமின்E இருக்கிறது. ஆகையால் கண் பார்வை திறனை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.

இந்த மூன்று பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பசும்பால் அல்லது பாக்கெட் பாலை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் பாலை காய்ச்சி அதில் நாம் அரைத்து வைத்திருந்த பவுடரை 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு அந்தப் பாலை வடிகட்டாமல் அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்கப் போகும் முன் குடித்துவிட்டு தூங்க வேண்டும். வெறும் 10 நாட்கள் குடித்தால் போதுமானது. கண் சம்பந்தமான பிரச்சனைகள் அதாவது கண் எரிச்சல், பார்வை குறைபாடு, மன அழுத்தம் ,கிட்ட பார்வை, மற்றும் துவரப்பார்வை, போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளும் சரி செய்ய உதவுகிறது.