60 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்!
சருமத்தில் கரும்புள்ளிகள், தேமல், மங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அதற்கு சோப் மூலம் தீர்வு காணலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, சருமத்தில் கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதை குணமாக்க வெப்பாலை சோப் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெப்பாலை இலை
2)காஸ்ட்டிக் சோடா
3)தேங்காய் எண்ணெய்
சோப் தயாரிக்கும் முறை:-
ஒரு கைப்படி அளவு வெப்பாலை இலை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இந்த வெப்பாலை இலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெப்பாலை சாறு 1 1/2 கப் அளவு சேர்த்து கலந்து விடவும். அடுத்து ஆறு கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் காய விட்டால் வெப்பாலை சோப் தயாராகி விடும்.
வெப்பாலை சோப்பை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் தொடர்பான அனைத்தும் பாதிப்புகளும் குணமாகும்.