தொப்பை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ கெட்ட கொழுப்பை கரைக்கும் கோடைகால பானம்! 

0
172
#image_title

தொப்பை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ கெட்ட கொழுப்பை கரைக்கும் கோடைகால பானம்! 

நாம் தற்போது பார்க்கப் போகும் சுவையான பானம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உடம்பில்  உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட இந்த பானம் எளிமையான செயல்முறை மற்றும் அதிக சுவையை கொண்டது.

பானத்தை தயாரிக்கும் முறையை பார்ப்போம். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் இரண்டு பேர் குடிக்கும் அளவிற்கு ஏதுவானதாக இருக்கும்.

**ஒரு பவுலில் 2 ஸ்பூன் சீயா விதைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த விதிகள் நமக்கு ஏற்படும் இடுப்பு வலி, கை கால் வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி இவற்றை குணமாக்கும். உடல் சூட்டை குறைத்து எடையை வேகமாக குறைக்கும். 100 மில்லி தண்ணீர் ஊற்றி விதைகளை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

**அடுத்து ஒரு கேரட்டை எடுத்துக் கொள்ளவும். கேரட்டில் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே ஆகியன உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கெட்ட கொழுப்பை கரைக்கும். கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ளவும்.

** அடுத்து 2 தக்காளி பழங்களை எடுத்துக் கொள்ளவும். இது ஒரு 250 கிராம் இருக்கலாம். தக்காளி உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும். இதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

**ஒரு மிக்ஸி ஜாரில் கேரட்,  தக்காளி துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஐந்து கருப்பு மிளகாய் இடித்து போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி சேர்த்து 50 மில்லி தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

** அடுத்து ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு அதில் 3 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். பிறகு ஊற வைத்த சியா விதைகள் 4 ஸ்பூன் அதில் போடவும். இதை நன்றாக கலக்கி விட்டு பின்னர் அரைத்து வைத்த கேரட், தக்காளி கலவையை டம்ளரில் ஊற்றி நன்றாக கலக்கவும்.

இந்த ஆரோக்கியம் நிறைந்த பானத்தை மதிய வேளையிலோ அல்லது இரவிலோ குடித்து வரலாம். இது சுவைக்காக இனிப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை. இது உங்கள் உடல் எடையை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றும். இது உடல் உஷ்ணத்தை குறைத்து புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு உதவும்.