உடல் எடையை 21 நாட்களில் குறைக்க வேண்டுமா!!? அப்போ சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க!!! 

0
26
#image_title
உடல் எடையை 21 நாட்களில் குறைக்க வேண்டுமா!!? அப்போ சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க!!!
உடல் எடையை வெறும் 21 நாட்களில் குறைப்பதற்கு சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் சியா விதைகளில் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலருக்கும் உடல் எடை என்பது அதிகமாக இருக்கும். இதை குறைப்பதற்கு பல வழிமுறைகளையும், பல மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் எந்தவித பலனும் இருந்திருக்காது. இந்த பதிவில் சியா விதைகளை பயன்படுத்தி 21 நாட்களில் எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.
மற்ற உணவு வகைகளை காட்டிலும் சியா விதைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறைகின்றது. சியா விதைகளில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றது. முக்கியமாக இதில் புரதச் சத்தும், நார்ச்சத்துக்களும் அதிகளவில் இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகின்றது.
உடல் எடையை குறைக்க சியா விதைகளை பயன்படுத்தும் முறை:
உடல் எடையை குறைப்பதற்கு சியா விதைகளை நாம் ஊறவைத்து உட்கொள் வேண்டும். அதாவது இரண்டு ஸ்பூன் சியா விதைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் மட்டும் இதை செய்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கிய விடும். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் நம்முடைய உடலில் அதிக அளவில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறையத் தொடங்கும்.
சியா விதைகளின் மற்ற நன்மைகள்…
சியா விதைகளை நாம் தினமும் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் சியா விதைகளை சாப்பிடும் பொழுது வயிறு சுத்தமாகும். இதை தவிர்த்து 21 வாரங்கள் வரையிலும் சாப்பிடலாம்.  சியா விதைகளை ஓட்ஸ் சேர்த்து சாப்பிடலாம். தயிர் அல்லது யோகர்ட்டுடன் சேர்த்து சியா விதைகளை சாப்பிடலாம்.