உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

0
139
#image_title

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

இன்றைய நவீன உலகில் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:-

துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*கொள்ளு

*எலுமிச்சை சாறு

*தேன்

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்து இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலை அதை நன்கு வேக வைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை மளமளவென குறையும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம்

*தேன்

*எலுமிச்சை சாறு

*இஞ்சி

*புதினா

*க்ரீன் டீ தூள்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம், சிறு தூண்டு இடித்த இஞ்சி, 10 முதல் 15 புதினா இலைகளை சேர்க்கவும்.

பின்னர் அதில் சிறிதளவு க்ரீன் டீ தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகி வருவதன் மூலம் உடல் எடை விரைவில் குறையும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*காபி தூள்

*எலுமிச்சை சாறு

*தேன்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகி வருவதன் மூலம் உடல் எடை மளமளவென குறையும்.

Previous articleகுலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!
Next articleநரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி?