உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள் மற்றும் உப்பு கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள் மற்றும் உப்பு கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

நாம் வசிக்கும் வீடு மற்றும் பயன்படுத்தும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கு இருக்கு. வீடு மற்றும் கழிவறை சுத்தமாக இருந்தால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது.

ஆனால் பெரும்பாலானோர் இதை முறையாக செய்வதில்லை. நாம் அடிக்கடி பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சம் பழம்

*வாஷிங் பவுடர்

*சோடா உப்பு

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி வாஷிங் பவுடர் மற்றும் 3 தேக்கரண்டி அளவு சோடா உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். இவ்வாறு அரைப்பதன் மூலம் அவை பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.

அடுத்து இந்த பேஸ்டை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்பிரேயரில் இந்த கலவையை ஊற்றி பாத்ரூமில் அழுக்கு கறைகள், மஞ்சள் கறைகள், பாசி இருக்கும் இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்னர் டைல்ஸில் ஒட்டிருந்த கறைகள் ஊறி வந்த பின்னர் ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணி நன்கு தேய்த்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் கழிவறை சுத்தமாகி டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும். கழிவறையில் வீசிய துர்நாற்றமும் அகலும்.