மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!

0
110
#image_title

மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!

நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அவை வெண்மையாக இருந்தால் நமக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கை ஏற்படும்.ஆனால் இன்றைய உணவுகள் பற்களை பல்வேறு விதத்தில் சேதப்படுத்தி வருகிறது.விரைவில் சொத்தை உருவாகுதல்,மஞ்சள் பற்கள்,அதிகளவு கிருமிகள் என்று நம் பற்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதனை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற பற்களை சரி செய்வதற்கான முறையான வழிகளை கடைபிடிக்க வேண்டும்.இதற்கு 1000 கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசயம் இல்லை.வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் மஞ்சள் பற்களை வெள்ளை நிறத்திற்கு அழகாக மாற்ற முடியும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

*சோடா உப்பு – 1 ஸ்பூன்

*மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி,சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.

2.பின்னர் சமயலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு குழப்பி கொள்ளவும்.

3.செய்து வைத்துள்ள இந்த பேஸ்டை பல் துலக்க பயன்படும் பிரஸில் சேர்த்து நன்கு துலக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மஞ்சள் பற்கள் வெண்மை நிறத்திற்கு மாறி விடும்.

மற்றோரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*டூத் பேஸ்ட் – சிறிதளவு

*தூள் உப்பு – 1 சிட்டிகை

*தோல் நீக்கிய வெள்ளை பூண்டு – 4 பற்கள்

*எலுமிச்சை சாறு – 15 சொட்டுகள்

*மஞ்சள் – 1சிட்டிகை

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் டூத் பேஸ்ட்,தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

2.பிறகு வெள்ளை பூண்டு 4 பற்கள் எடுத்து அதை ஒரு உரலில் போட்டு மைய்ய அரைத்து அதை செய்து வைத்துள்ள பேஸ்ட் கலவையில் சேர்த்து கொள்ளவும்.

3.பின்னர் 10 முதல் 15 சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் 1சிட்டிகை அளவு குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் துள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை பல் துலக்கும் பல் துலக்க பயன்படும் பிரஸில் சேர்த்து 2 நிமிடங்கள் வரை துலக்கவும்.இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் மஞ்சள் பற்கள்,பல் கறைகள் நீங்கி வெண்மையாக மாறி விடும்.

Previous articleஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!
Next articleஇதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!