இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!!
உங்கள் முகத்தில் உள்ள கொப்பளங்கள்,தழும்புகள்,சுருக்கங்கள் நீங்க இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
1)தக்காளி சாறு
2)முல்தானி மெட்டி
3)மஞ்சள் தூள்
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு,ஒரு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
1)பால்
2)மஞ்சள்
3)கடலை மாவு
4)சந்தன தூள்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி சந்தன தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்டாக்கி முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
1)எலுமிச்சை சாறு
2)மஞ்சள்
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக்கி முகம் முழுக்க அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் அதிக பொலிவாகவும்,பளபளப்பாகவும் மாறும்.