இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!!
இன்று 37 ஆவது உலக மக்கள் தொகை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியா எதில் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பில் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது என்றும் தற்போது உலக மக்கள் தொகை 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது என்று ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனை கடந்து விட்டதன் நினைவாக தான் இந்த நாளை உலக மக்கள் தினமாக கொண்டாடுகிறோம். அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை 5 பில்லியனை கடந்தது. தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வளர்ச்சி நகரமயமாற்றத்தில் ஏற்படும் விளைவுகள் வாழ்நாள் எண்ணிக்கை உயர்வு என பல்வேறு காரணங்களால் தொடர் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மக்கள் தொகை உயர்ந்து வந்தாலும் மறுபுறம் அவர்களுக்கான சம வாய்ப்பு சமூகத்தில் கிடைப்பதில் பின்னடைவாக உள்ளது.
நாட்டில் உள்ள மக்களுக்கு அனைத்து வகையிலும் சமத்துவம், நீதி, சம வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தையும் கிடைக்கப்பெற பாடுபடுவது உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிப்பதின் முக்கிய நோக்கமாகும்.
உலக அளவில் ஐநாவின் நிலவரப்படி இந்தியா தான் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐநா சபை கணக்கின்படி 2064 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 1.7 பில்லியனை கடந்து விடும் என எச்சரித்துள்ளது. உலகின் பெரும் இளைஞர் படையை வைத்திருந்தாலும் வேலையின்மை, வறுமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் இந்தியா பெறும் அபாயத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. எனவே நம் அரசு இதற்கான சரியான திட்டமிடலை வகுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.