மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!
ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன்படி தமிழகத்தை பொறுத்தவரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக ஈரோடு, தருமபுரி, தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.