49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா!!

0
42
#image_title
49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய(நவம்பர்5) உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் போட்டிகளில் தன்னுடைய 49வது சதத்தை அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
நேற்று(நவம்பர்5) நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி அவர்கள் சதமடித்து 101 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா 40 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணியில் இங்கிடி, ரபாடா, ஷம்சி, மஹராஜ், ஜான்சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 327 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மென்கள் அனைவரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், முகம்மது ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் 8வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் இந்தியா அணி தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. இந்தியா அணி இந்த தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணியாகவும் இந்தியா உள்ளது.
அதே போல ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டியாக இந்த போட்டி அமைந்தது. அதன்படி தென்னாப்பிரிக்க அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஒருநாள் தொடரில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்ற முதல் போட்டியாக இந்த உலகக் கோப்பை லீக் சுற்று அமைந்துள்ளது. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றதுதான் முதல் போட்டியாக இருந்தது.
அது மட்டுமில்லாமல் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா அவர்கள் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பிடித்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்த அணிக்காக  யுவராஜ் சிங் அவர்கள் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த போட்டி குறைந்தபட்ச ரன்கள் அடித்த நான்காவது போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக  சதம் அடித்த விராட் கோஹ்லி அவர்கள் ஒரு கிரிக்கெட் வரலாற்றில் 49வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்களின் சாதனையை சமன் செய்தார். சச்சின் தெண்டுல்கர் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 49 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் முதலிடத்தில் இருந்துவந்த நிலையில் தற்பொழுது விராட் கோஹ்லி அந்த சாதனையை சமன் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் அவர்கள் 49 சதங்களை வந்து 452 போட்டிகளில் விளையாடி அடித்திருந்தார். விராட் கோஹ்லி அவர்கள் 277 போட்டிகளில் விளையாடி 49 சதங்களை அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். 31 சதங்களை அடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் 30 சதங்களை அடித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் நான்காவது இடத்திலும் இருக்கின்றார்.