மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!
ஆரோக்கியமற்ற உணவுமுறை மாற்றத்தால் இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,மூலம்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவு உண்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் உணவில் அக்கறை செலுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.
தேவையான பொருட்கள்:-
1)மோர்
2)ஓமம்
3)சின்ன வெங்காயம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் 2 அல்லது 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு இடிக்கவும்.
பிறகு ஒரு கிளாஸ் மோரில் வறுத்து அரைத்த ஓமப் பொடி,இடித்த சின்ன வெங்காயம் சேர்த்து கலக்கி குடிக்கவும்.இதை காலை நேரத்தில் குடித்து வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,பைல்ஸ் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)மோர்
2)கற்றாழை ஜெல்
3)வெந்தயம்
செய்முறை:-
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 முறை அலசிக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் அரைத்த கற்றாழை சாறு மற்றும் வெந்தயத் தூள் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.
தொடர்ந்து குடித்து வந்தால் பைல்ஸ்,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,அல்சர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.