உடம்பு வெய்ட் போட்டுக்கிட்டே போகுதா..? அதை குறைக்க எளிய தீர்வு இதோ..!!

Photo of author

By Divya

உடம்பு வெய்ட் போட்டுக்கிட்டே போகுதா..? அதை குறைக்க எளிய தீர்வு இதோ..!!

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது ஒரு பெரும் பிரச்சனையாவே இருக்கின்றது. தொடர்ந்து அதிகரிக்கும் உடல் எடையால் ஆரோக்கியம் விரைவில் கெட்டுபோய்விடும் சூழல்
ஏற்படுகிறது. இந்த உடல் பருமனால் நீரழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய், தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

உடல் பிட்டாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். இந்த உடல் பருமனை குறைக்க சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதுமானது.

தேவையான பொருட்கள்:-

*ப்ரோக்கோலி

*வெங்காயம்

*தண்ணீர்

*உப்பு

*கருப்பு மிளகு

*ஆலிவ் ஆயில்

செய்முறை…

முதலில் வெங்காயம் மற்றும் ப்ரோக்கோலியை வெட்டிக் கொள்ளவும். அடுத்து குக்கரில் 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கோலியை சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இந்த சூப்பை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பருகவும்.

இவ்வாறு அடிக்கடி செய்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.